சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

‘வெற்றியாளர் பட்டறை’ கண்காட்சியையும், ஒவிய போட்டியையும் அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்..!

‘வெற்றியாளர் பட்டறை’ கண்காட்சியையும், ஒவிய போட்டியையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் நடந்து வரும் ‘வெற்றியாளர் பட்டறை’ வகுப்புகள், நமது நாட்டின் அடுத்த தலைமுறையை ‘ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும்’ வளர்க்கும் முயற்சி. இதில் கடந்த சில வருடங்களாக நடக்கும் ‘ஒவிய வகுப்பின்’ மாணவர் படைப்புகளை ஞாயிறன்று  காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியையும், கிராம மாணவர்களுக்காக நடைபெறும் ஒவிய போட்டியையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  துவக்கி வைத்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முகுந்தன், தன் இதர நேரங்களில் தன் கிராமத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னலமற்ற பணியாற்றி வருகிறார். இந்த பட்டறையிலிருந்து பல்வேறு கலைகளை கற்று மாணவர்கள் வெகுவாக பயனடைகிறார்கள்....
‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், குடியரசு தினத்தன்று வெளியான குறும்படம் ‘மா’ இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிக்கா 10 வது படிக்கும் போதே கர்ப்பமாகும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த குறும்படத்தில் சாதாரண அம்மாவாக நடித்தவர் மலையாள நடிகை கனி கஸ்தூரி. இவரின் கவர்சிப்புகைப்படங்கள் வெளியாகி இவரா… அவர்…! என ரசிகர்களையே குழம்பும் அளவிற்கு இருக்கிறது....
தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டம்.. 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்..!

தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டம்.. 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஸ்கூட்டர் வாங்க மகளிருக்கு 50% மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3,36,103 விண்ணப்பங்கள் வந்து இருக்கின்றன. இதில் இருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. வேலைக்குச் மகளிர் செல்லும் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பம் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் என்றும் கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவிக்கப்பட்டது. ...
கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தன்மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தொடர்பாக இன்று நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் பிப்ரவரி 16 ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.  ...
கம்பளா எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

கம்பளா எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் கம்பளா எனப்படும் எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தக் ஷின கன்னடா பகுதிகளில் கம்பளா ஓட்டப்போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது. சேற்று வயல்களில் எருமை மாடுகளைப் பூட்டி விவசாயிகள் ஓடவிடுவார்கள். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை அந்த பகுதிகளில் இந்த கம்பளா போட்டி நடக்கும். இந்த போட்டி நடந்தால், சிறப்பான விளைச்சல் இருக்கும்என்றும், விவசாயிகளின் விளையாட்டாகவும் இந்த போட்டி கருதப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல இந்த போட்டி அங்கு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போட்டிக்கு நீதிமன்றத்தில் ...
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது.  இதற்காக நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது.  பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது.  சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவ...
வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது. இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வ...
ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்ததாக தாய்லாந்தில் ஒர மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ஜீவா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து செல்லவிருக்கின்றனர். அங்கு சுமார் ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்....
அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள். வேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார். நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதா...