சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்
சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் எச் ராஜா வைரமுத்துவை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார்.
மேலும், அவருக்கு பல்வேறு இந்துத்துவ இயக்கங்களும் கண்டனங்களும், மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்வ...








