டிடிவி தினகரன் 29–ந்தேதி ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கிறார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக் கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். 48 ஆயிரத்து 306 ஓட்டுகள் பெற்ற மதுசூதனனுக்கு 2-வது இடம் கிடைத்தது. ...









