செவ்வாய்க்கிழமை, ஜூன் 23
Shadow

Author: Kodanki

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட டீசர் நவம்பர் 30ல் ரிலீஸ்

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட டீசர் நவம்பர் 30ல் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்". படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்". இந்தப் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த வந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீஸர் தேதியை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான "நானா தானா" மற்றும் ''சொடக்கு மேல சொடக்கு'' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் வெற்றி பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் டீசர் தேதி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் டீசர் நவம்பர் 3...
நடிகை  நக்மாவின் வாழ்க்கைதான் ஜூலி-2 படமாம்..!

நடிகை நக்மாவின் வாழ்க்கைதான் ஜூலி-2 படமாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, செய்திகள், டிரைலர்கள்
  ஜூலி படம் தன்னுடைய கதை என்பது குறித்து அறிந்து நடிகை நக்மா அதிர்ச்சி அடைந்துள்ளார். ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் நடிகை நக்மாவின் வாழ்க்கை வரலாற்று கதை என்று கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் நக்மாவின் பெயரை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் பேசியது நக்மாவை பற்றி தான் என்று பலரும் கூறுகிறார்கள். https://youtu.be/R7tsDNDmQ2M ஓ, அப்படியா? ஜூலி 2 படம் என் கதை என்று நீங்கள் சொல்லித் தான் எனக்கே தெரியும். பத்மாவதி படத்திற்கு தான் பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதனால் ஜூலி 2 படத்திற்கும் கொஞ்சம் கிடைக்கட்டும் என்று கூறியிருப்பார்கள். தற்போது ஜூலி 2 குறித்து நான் எதுவும் கூற முடியாது. படம் ரிலீஸாகாததால் அது பற்றி நான் பேசுவது நியாயம் இல்லை. வழக்கமாக நான் படம் பார்ப்பேன். ஆனால் ஜூலி படத்தை நிச்சம் பார்ப்பேன். படம் பார்த்த பிறகு பேசுகிறேன் என்று நக்மா தெரிவித்துள்ளார...
பேரை மாற்றிக்கொண்டு பேஷன் ஷோவில் களம் இறங்கிய நடிகரின் மனைவி

பேரை மாற்றிக்கொண்டு பேஷன் ஷோவில் களம் இறங்கிய நடிகரின் மனைவி

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமீபத்தில் குடும்ப வாழ்க்கை பிரச்னையால் போலீஸ் நிலையம் சென்றவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், குழந்தையைக் கொடுமைப் படுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்திருந்தார். குடும்பத்தில் நிறைய சிக்கல்கள் நிலவியதை அடுத்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்துவந்த பாலாஜி இப்போது தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்   சென்னையில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்துகொண்டுள்ளார். ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடைபோட்ட நித்யாவை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர். நித்யா, 'Women Endeavor' எனும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான NGO அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். பழைய பிரச்னைகளிலிருந்து ...
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’ படத்தை திரையிட கோர்ட் உத்தரவு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’ படத்தை திரையிட கோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, Trailer, செய்திகள், டிரைலர்கள்
  கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படாமல் 'செக்ஸி துர்கா' படம் தடுக்கப்பட்டது மலையாள திரையுலகில் சர்ச்சைக்கு உள்ளானது. சணல் குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', மற்றும் 'நியூட்' ஆகிய இரு படங்கள் IFFI திரையிடலில் இருந்து நிறுத்தப்பட்ட்ன. திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்பி விருதுகளை அள்ளும் மலையாள இயக்குனர்களில் ஒருவர் தான் சணல் குமார் சசிதரன். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'செக்ஸி துர்கா' என டைட்டில் வைத்துள்ளார். இந்தப் படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பால் 'எஸ்.துர்கா' என சென்சார் போர்டு வழிமுறைகளின்படி டைட்டில் மாற்றப்பட்டது. இந்தப் படத்தை கோவா திரைப்பட விழாவில் அனுமதிக்காததால் வழக்கு தொடர்ந்தார் இயக்குநர் சணல் குமார் சசிதரன். எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் கிளப்பாது. நீங்கள் எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என என்ன பெயரில் மாற்...
மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் திகில் படம் மல்லி..!

மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் திகில் படம் மல்லி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு“மல்லி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13ம் பக்கம் பார்க்க ,வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு  பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றவர்கள்.. இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ நடிக்கிறார்.  மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ்,  அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ். வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம் தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு ப...
படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்

படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார். விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடல...
தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
  1995 முதல் 2005 வரை, போலீசுக்கே மிகப் பெரிய சவாலாக இருந்த பவாரியா வழக்கின் மறு உருவாக்கம் இது. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு லாரி லோடு கொண்டு வருபவர்களில் ஒரு குழுவினர், போகும்போது சென்னை புறநகரில் தனித்து இருக்கும் வீடுகளில் புகுந்து, அங்கிருப்பவர்களை கொடூரமாகத் தாக்கி கொன்றுவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். போலீசுக்கே சவாலாக இருக்கும் இந்தக் குற்றங்களுக்கு எந்த தடயமும் கிடைப்பதில்லை. சம்பவங்களும், சாவும் அதிகரிக்கிறது. இளம் தலைமுறை காவல்துறை அதிகாரி தீரன் திருமாறன் (கார்த்தி), இந்த குற்றவழக்கைக் கையிலெடுத்து துப்பறிகிறார். ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது. அதைப் பின்தொடர்ந்து வடநாடு சுற்றி, ராஜஸ்தான் பாலைவனம் வரை தன் டீமுடன் பயணப்படுகிறார். போலீசுக்கு அரசால் வழங்கப்படும் சிறு உதவி, சென்ற இடமெல்லாம் கிடைக்கும் அவமானம், அலட்சியம், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, உய...
கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்

கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அசோக்குமாரின் தற்கொலை திரையுலிகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகின் இன்றைய நிகழ்வை படம் பிடித்து காட்டுவதாக தெரிவித்த பிரகாஷ்ராஜ், நமக்கு தெரியாமல் எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரையுலகின் அனைத்து தரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கருப்பு பண சம்பளம் வாங்குவதை நடிகர்கள் நிறுத்த வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார். நடிகர்கள் கருப்பு பணத்தில் சம்பளம் பெறுவதாக பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து வரிகளை செலுத்தினாலும் பாதுகாப்பற்ற துறையாக திரைத்துறை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்துறையில் ...