பைட் கிளப்பில் சண்டை இருக்கு… சரக்கு இல்லை- திரைப்பட விமர்சனம் 2.5/5
பாக்ஸிங்கை உயிராக நினைத்து வாழும் பெஞ்சமினுக்கு, வடசென்னைக்காரன் என்ற அடையாளம், அவன் மேலே செல்வதற்கு முட்டுக்கட்டையாக நிற்க, திறமை இருந்தும் சோபிக்காமல் போகிறார்.
இதில் மனம் உடைந்த பெஞ்சமின், தான் இழந்ததை தான் ஊர் இழக்கக்கூடாது என்று எண்ணி தன்னுடைய ஊருக்காக வடசென்னை ராஜன் போல வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் தம்பி ஜோசப்போ கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் கஞ்சா விற்று கொண்டு இருக்கிறான்.
இதை பெஞ்சமின் பலமுறை கண்டித்தும் தம்பி கேட்ட பாடில்லை. இதனிடையே, சம்பவம் ஒன்றில், தம்பியையும் கிருபாவையும் நடுரோட்டில் வைத்து பெஞ்சமின் பொளந்து கட்ட,இனி வேலைக்கு ஆகாது என்று, அண்ணனை கிருபாவுடன் சேர்ந்து தீர்த்து கட்டுகிறான் தம்பி ஜோசப்.
சம்பவத்தில் யார் ஜெயிலுக்கு போவது என்ற பேச்சு வர ஜோசப்பை ஜெயிலுக்கு போக சொல்லும் கிருபா ஒரு வாரத்தில் வெளியே எடுத்து...









