பொங்கல் ரேசில் களமிறங்கும் படங்கள்..!
பண்டிகைகளில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு வர உள்ளன.
https://youtu.be/pPlUKlP4rT8
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய 6 படங்களையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து குரல் பதிவு, இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது
https://youtu.be/hYM_iZII4U4
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தெலுங்கிலும் இந்த படம் ‘கேங்க்’ என்ற பெயரில் வெளியாகிறது. அதிரடி கதையம்ச...









