ஜெயம் ரவியின் அடங்க மறு படம் பூஜையுடன் தொடங்கியது..!
உலக அளவில் மீடியா துறையில், சின்ன திரை தயாரிப்பிலிருந்து சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான 'ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ' தமிழ் சினிமா துறையில் கால் பாதிக்கவுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் தயாரிப்பிற்கு கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என இரு தரப்பட்ட படங்களிலும் கலக்கி உயர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்தை, சரண், மிஸ்கின் மற்றும் அமீருடன் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'அடங்க மறு ' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து, '' ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவே...









