தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI
ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளில் 14,500 ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
நாட்டில் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் திடீரென புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் . மேலும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடும் சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றினர்.
இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்க...








