லோகேஷை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்கிய நெல்சன்
ஜெயிலர் பிரமாண்ட வெற்றியை கொடுத்த நெல்சன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். கவின் நடிக்க உள்ள அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் நெல்சனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சிவா. இப்போதைக்கு நெல்சன் ஆபீஸ்தான் இதற்கு ஆபீஸ். விரைவில் அறிவிப்பு வரும்!
ஏற்கனவே தனது உதவியாளர் நண்பர் ரத்னகுமாருக்கு நயன்தாரா-ராகவா லாரன்ஸ் காம்போவில் ஒரு படத்தை தயாரிக்கும் லோகேஷ்கனகராஜ் அந்த பட்த்திற்காக திரைக்கதை அமைத்து வசனமும் எழுதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் 'பிரம்மயுகம்' படத்தில் நடிகர் மம்முட்டிக்கான போர்ஷன் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரம்மயுகம்’ 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும்.
சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் தயாரிக்கும் 'பிரம்மயுகம்' படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி, இசை கிறிஸ்டோ சேவியர், வசனம் TD ராமகிருஷ்ணன், மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் மெல்வி ஜே ஆகியோர் பணிபுரிகின்றனர்.
மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்...
600 படங்களுக்கு மேல் நடித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் சரண்ராஜ்.
20 வருடங்களுக்கு முன் தான் நடித்த அண்ணன் தங்கச்சி என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறிய சரண்ராஜ், தற்போது தனது மகன் தேவ் கதாநாயகனாக நடிக்கும் ‘குப்பன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் ஆதிராம் இன்னொரு நாயகனாக நடிக்க, சுஷ்மிதா மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் சரண்ராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கதாநாயகிகளில் ஒருவரான பிரியதர்ஷினி அருணாச்சலம் கூறும்போது, “இந்தப் படத்திற்காக நான் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, சரண்ராஜ் சாரின் படத்தில் தான் நடிக்க போகிறேன் என்பது த...
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு எதிராக ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் நான்கு முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக விஷால், சிம்பு, யோகிபாபு, அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையால் இந்த பிரச்சனை ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது.
தற்போது மீண்டும் ஒரு முறை இந்த பிரச்னை எழுந்துள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி சிம்பு, தனுஷ் , விஷால், அதர்வா மொத்தம் நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க ம...
அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!!
சென்னை : ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி பேசிய, வி.எச்.பி. முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராயர் நகரில் வைத்து இன்று காலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்...
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதிலும் இந்த சாதனையை மிக வேகமாக படைத்திருக்கும் படமும் இதுதான். இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது!
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வசூல் புள்ளி விவரங்களுடன், புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பெரிய திரையில் வியக்கத்தக்க அளவில் காண்பிக்கப்பட்டிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சாகசத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு.. வேறு வெளியீடுகளுடன் போட்டியிட்டாலும், இதன் வலுவான வசூலை அற்புதமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெர...
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'அடியே'. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குநர் விக்னேஷ் கார்த்...