அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5
கதைப்படி ராணுவ வீரரான ஷாருக்கான், ராணுவத்துறையில் நடந்த ஒரு மோசடி குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அதனால், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாருக்கானை தேசதுரோகியாக முத்திரை குத்தி கொலை செய்துவிடுகிறார். ஷாருக்கானின் மனைவி தீபிகா படுகோனே கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்ல, அங்கே அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனவுடன், தனது அப்பாவின் மீது விழுந்த களங்கத்தை துடைப்பதோடு, அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களுக்காக புதிய வழியில் போராட்டம் ஒன்றை அறங்கேற்றுகிறார். அது என்ன? அதை எப்படி செய்கிறார்? என்பதை அதிரடியாகவும், அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் சொல்லியிருக்கிறார்.
அப்பா விக்ரம் ரத்தோர், மகன் ஆசாத் ரத்தோர் ...









