அதிமுகவின் 3-ம் அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார் – தினகரன்
அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: தினகரன்
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு மனைவி அனுராதா, மகள் ஜெயஹரிணி ஆகியோருடன் தினகரன் வந்து தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் மன்னார்குடி சென்று சசிகலாவின் தம்பி திவாகரனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர்.
இதன்பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
எடப...









