‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !
கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே!
நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!
Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது...









