பிச்சைக்காரனை பணக்காரனாக பார்த்த விஜய் ஆண்டனி – இயக்குனர் சசி பாராட்டு
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து
மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி பேசியதாவது, "வந்துள்ள அனைவருக்கும் வணக்கம்! இது எங்களுடைய படம். பொது மேடைகளில் எங்களுடைய படம் பற்றி பெரிதாக நான் பேச விருப்பப்பட மாட்டேன்....









