உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது!
மண் சார்ந்த யதார்த்தக் கதைகளை படைப்பதில் திறமையானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.
மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது. இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் (JIFF) இந்தப் படம் திர...
ஜெயம் ரவியின் “சைரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது…
இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களுக்கு உங்கள் ஆதரவைத் தந்துள்ளீர்கள் அதேபோல் இந்த சைரனுக்கும் ஆதரவு தாருங்கள். ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் ...
*ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகள் பெற்று முத்திரை பதித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பான இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’*
மொழி, இனம், மரபு, கலாச்சார எல்லைகள் கடந்து வாழும் மக்களுக்கான மகிழ்ச்சி தரும் ஆகப்பெருங்கலை சினிமா. இதில் தனித்துவமான மற்றும் காலத்தை வெல்லும் படைப்புகளால் உலக அரங்கில் தொடர்ந்து பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்க்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா.
சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த “ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க...
*அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும்- நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் - ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!*
*அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!*
முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம், “தண்டேல்”. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்குகிறார். அவரது வழிகாட்டல்களுடன், மிக அழகான கிராமத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில், முதன்மை நடிகர்கள் பங்கேற்க, துறைமுகம் மற்றும் கிராமத்தில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக...
4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும்.
இந்த நான்கு படங்களின் தொகுப்பு, டிசம்பர் 30 அன்று பார்க்கிங் திரைப்படம் மற்றும் ஜனவரி 15 இல் ஜோ திரைப்படத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 முதல் ஃபைட் கிளப் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
இந்த புதிய திட்டத்தின் இறுதிப் படமாக - சபா நாயகன் படத்தினை பிப்ரவரி 14 அன்று ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் 'பார்க்கிங்', இது டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வரு...
இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட "எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்!
பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது. ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜியா அறிமுகம் ஆகிறார்.
இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் இன்று வெளியிட்டா...
அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலா கலந்து கொண்டார்.
இதன் போது எழுத்தாளர் நிம்மி சாக்கோ எழுதி, அமர் சித்ரா கதா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பதிப்பித்திருக்கும...
*மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் !!*
*விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் !!*
*மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.*
மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா...
VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!
சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார் இப்படத்தினை VJF - வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் J கவுடா தயாரிக்கிறார்.
இயக்குநர் ஹேமந்த் M ராவ் கூறியதாவது..,
ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.
மேலும் இயக...