புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

தம்பி ராமையா மகன் உமாபதி நடிக்கும் “பித்தல மாத்தி”

தம்பி ராமையா மகன் உமாபதி நடிக்கும் “பித்தல மாத்தி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது....
”Big Shorts – Season 3”க்காக மூவிபஃபுடன் இணைந்த டர்மெரிக் மீடியா

”Big Shorts – Season 3”க்காக மூவிபஃபுடன் இணைந்த டர்மெரிக் மீடியா

CINI NEWS
மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக 'Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக' மூவிபஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது. படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும் இந்த போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப...
மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் நிறுவனம் ‘7 MILES PER SECOND’. இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதன் முதலாக பட தயாரிப்பில் இறங்குகிறார். இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். ‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் இந்த காதல் கதையை ‘மிஸ்’ பண்ணாமல் நடிக்க ஒத்து கொண்டுள்ளார் சித்தார்த். இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இப் படத்தை இயக்குகிறார். இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழ...
இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – ஸ்ருதிஹாசன் !!

இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – ஸ்ருதிஹாசன் !!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  *இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி - தந்தை குறித்து உருக்கமாக பகிர்ந்த ஸ்ருதிஹாசன் !!* இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை - நடிகை ஸ்ருதிஹாசன் !! இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார். ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வ...
ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!

ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
  *ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!* ஆந்திரம் மற்றும் தெலங்கானாவின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அந்த வகையில், தனி மாநிலமாகப் பிரிந்து 10 ஆண்டுகளாகியும் தலைநகருக்கான கட்டமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் ஆந்திரம் உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து பிரிந்து நாட்டின் 29-ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி உருவானது. அந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி இயற்றப்பட்ட ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் ஹைதராபாதை பொதுத் தலைநகராக கொண்டு செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் ஹைதராபாத் தெலங்கானாவுக்கு மட்டுமே தலைநகா் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர அரசின் பயன்பாட்டில் இருந்து வந்...
ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அவசர கடிதம்!

ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அவசர கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள், "பெரும்பான்மையான மக்களின் மனதில் 'உண்மையான அச்சங்கள்' உள்ளன. மக்களின் இந்த அச்சத்தை சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்வ...
“நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச்” கமெண்ட் அடித்த இசைஞானிஇளையராஜா!

“நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச்” கமெண்ட் அடித்த இசைஞானிஇளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  "நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க " நச் கமெண்ட் அடித்த #இசைஞானிஇளையராஜா! இசைஞானி இளையராஜா அவர்களின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு #தமிழ்திரைப்படபத்திரிகையாளர்சங்கத்தின் சார்பில் ராஜா சாரின் ஸ்டுடியோவில் அவரை சந்தித்து அழகிய புகைப்படம் ஒன்றை பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம் தான் மிகவும் நேசித்த மகள் பவதாரணி மறைவை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாட்டத்தை தவிர்ப்பார் என எண்ணியிருந்தோம் யாரையும் சந்திக்க மாட்டார் என்று நினைத்திருந்தோம் ஆனால் அனைவரின் நினைவை மாற்றி காலையிலிருந்து ஏராளமான ரசிகர்களை சந்தித்து அவர்களோடு தனித்தனியாக புகைப்படம் எடுத்து வந்தவர்களுக்கு உணவும் அளித்து அனுப்பி வைத்தார் ராஜா. ஒரு இசை நிகழ்ச்சியில் அவரை எடுத்த புகைப்படத்தை தான் சங்கத்தின் சார்பில் நினைவு பரிசாக வழங்கியிருந்தோம் இந்த புகைப்ப...
தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில், படத்தின் க...
“மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” – “அஞ்சாமை” இயக்குநர் சுப்புராமன்

“மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” – “அஞ்சாமை” இயக்குநர் சுப்புராமன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *“இந்த சமயத்தில் மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..”* - *இயக்குநர் சுப்புராமன்* *அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார்.\ விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு அஞ்சாமை படக்குழுவினர் பத்திரிகைய...
“மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!

“மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !! கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் “மார்ட்டின்” திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் உதய் K மேத்தா கூறுகையில்.. 'மார்ட்டின்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம், அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஆக்‌ஷன் பிரின்ஸ் த...