தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..! பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்
தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..!
பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்
இது குறித்து ஆவண பட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் பாரம்பரியத்தின் மீதும் காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் மறைமுக அடக்குமுறைகளில் ஒன்றாக இதுவரை இருந்த வந்த அந்நிய சக்திகள் இப்போது அதி தீவிரமாக களத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் பாரம்பரியத்தை மீட்கவும், காப்பாற்றவும் தமிழர்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள்.
மாணவர்கள் போராட்டம் எப்போதும் தோற்றதில்லை. தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கையாலாகாத அரசாக மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுகிறது. தமிழர்கள் மீதான அடக்குமுறையை சத்தமில்லாமல் மத்திய அரசு செய்து வருவது இந்த விவகா...
