விஷ்ணு டாக்கீஸ் வழங்கும் ‘CUSTOMER’ – நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம் இன்று வெளியீடு!
விஷ்ணு டாக்கீஸ் வழங்கும் 'CUSTOMER' – நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம் இன்று வெளியீடு!
கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் (Vishnu Talkies) வழங்கும் 'CUSTOMER' குறும்படம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது" (You don't buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாக...








