மொட்ட சிவா கெட்ட சிவா
எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..! - விமர்சனம்
படம் முடிந்து பல ஆண்டுகள் ஓடியது... ரிலீஸ் தேதிகள் பல அறிவிக்கப்பட்டது... பேப்பர் விளம்பரங்கள் பரபரப்பாக வெளியான நிலையில் பலமுறை தடையாகி கடைசியில் நீதிமன்றத்தால் ரிலீஸ் தடை செய்யப்பட்ட லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஒருவழியாக இந்த தடை போராட்டங்களை முடித்துக் கொண்டு 9ம்தேதி ரிலீஸ் ஆகிவிட்டது.
கடமை தவறாத போலீஸ் ஆபீசர் சத்யராஜ் எப்போதும் போலீஸ் பணியிலேயே இருக்கிறார். மனைவியின் பிரசவ நேரத்தில் கூட கடமை என போய்விட்டதால் பிரசவத்தில் அம்மாவையும், குழந்தையையும் பறிகொடுக்கிறார் மகன் லாரன்ஸ். அப்போதில் இரு ந்தே அப்பா சத்யராஜ்மீது வெறுப்பு ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடுகிறார்.
ஒரு மந்திரியின் சிபாரிசில் ஏசிபியாக வருகிறார் லாரன்ஸ். அவருக்கு மேல் அதிகாரியாக இருக்கிறார் அப்பா சத்யராஜ். ஆனால் மகன்தான் ஏசிபி என்ற விவரம் சத்யராஜூ...
உலகில் எந்த குழந்தைக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு ஈர மனசும் சொல்லும் விதத்தில் இரு க்கிறது ‘நிசப்தம்’ படம்.
படம் பார்த்த பாதிப்பு விமர்சனம் எழுதவே தோன்றாமல் தடுமாற வைத்திருக்கிறது... அந்தளவுக்கு ஒரு வலியான மனசு பாதிக்கும் நிஜத்தை சினிமாவாக ‘நிசப்தம்’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றிருக்கிற எல்லா பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் இது.
படத்தின் பெயர்தான் நிசப்தம்... ஆனால், படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளிலும் அதன் வலிமிகுந்த தாக்கம் ஏற்படுத்தும் அதிர்வெடிகள் மனித மனங்களை வெடிவைத்து தகர்க்கும் சத்தம் மனசை தாண்டி கண்களில் வழியாக கண்ணீராக வெளிகாட்டும்.
சரி படம் அப்படி என்னதான் சொல்கிறது...
ஒரு அப்பா, அம்மா, ஒரு பெண் குழந்தை, ஒரு நண்பன் அவன் மனைவி, அவன் பிள்ளை இவர்களை சுற்றியே நடக்கிறது கதை. வீட்டில்...
என்னை கற்பழிக்கப் போவதாக ட்விட்டரில் பலரும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
இது தொடர்பாக, மாற்றம் கோரும் இணையதளமான change.com-ல் ஒரு வேண்டுகோளை வைத்து, மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.
சமூக வலைத் தளமான ட்விட்டரில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடிகர் நடிகைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆரம்பத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இவை வெளியாகின. பின்னர் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதும், சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேகுடன் வெவ்வேறு பக்கங்களில் வெளியாகி வருகின்றன.
சின்மயி - அனிருத் படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் ஒரு சுசித்ரா பக்கத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் சின்மயி பற்றிய மேலும் சில அந்தரங்க தகவல்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் தன்னை கற்பழிக்கப் ப...
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியானது. இப்படத்தை வெளியிடுபவர்களில் ஒருவரான வேந்தர் மூவிஸ் மதன், பைனான்சியர் போத்ராவிடம் வாங்கிய ரூ.11 கோடி கடனை திருப்பிக் கொடுக்காததால், இப்படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார் போத்ரா. இதனால், இந்த படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்வாங்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்திற்கு எதிராக போத்ரா தொடர்ந்திருந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டியுள்ளனர். அதன்படி, வருகிற மார்ச் 10-ந் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிற...
பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..!
சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்
சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது. அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது.
நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ...
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
“எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்க...
யாக்கை விமர்சனம்
நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது.
சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களை ஏதாவது ஒரு விபத்துக்குள்ளாக்கி, அந்த ரத்தத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார். இதில், சுவாதியின் ரத்தமும் அரிய வகை ரத்தம் என்று அறியும் குரு சோமசுந்தரம், அவளை நோக்கியும் தனது பார்வையை செலுத்துகிறார். இதற்கிட...
ஒளிப்பதிவாளர் - இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கடுகு'. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த 'கடுகு' திரைப்படத்தை, 'ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் ராஜகுமாரன், பரத், விஜய் மில்டனின் சகோதரர் பாரத் சீனி, ராதிகா பிரசித்தா மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை '2 டி என்டர்டைன்மெண்ட்' சார்பில் வாங்கி இருக்கும் நடிகர் சூர்யா, இந்த படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த கதையை விஜய் மில்டன் என்னிடம் கூற வரும் போது எனக்கு உண்மையாகவே வியப்பாக இருந்தது. ஆனால் கடுகு படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். அற்புதமா...
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின்
"எழுச்சி கூட்டணி" நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது.
நிர்வாகிகள்
தலைவர் - கே.ஆர்
பொருளாளர் - S.A.சந்திரசேகர்
கௌரவ செயலாளர் - S.கதிரேசன்
கௌரவ செயலாளர் - A.L.அழகப்பன்
துணை தலைவர் - A.M.ரத்னம்
துணை தலைவர் - P.T.செல்வக்குமார்
செயற்குழு உறுப்பினர்கள்
L.M.M.K. முரளிதரன்
சத்யஜோதி தியாகராஜன்
அன்பாலயா பிரபாகரன்
மனோஜ் குமார்
பிரமிட் நடராஜன்
சித்ரா லட்சுமணன்
விஜயகுமார்
கஃபார்
H.முரளி
சோழா பொன்னுரங்கம்
V.A.துரை
செந்தில்நாதன்
K.முருகன்
ராஜா
விஸ்வாசுந்தர்
ராஜா சிற்பி.கே.கே
சந்திரசேகர்
ஈஸ்வரன்...