ராணா நாயுடு சீசன் 2
ராணா நாயுடு தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக கடைசியாக ஒரு வேலையைத் தொடங்குகிறார். ஆனால் விரைவிலேயே தனக்குப் பிடித்தமானவர்களால் வேற ஒரு பிரச்சினையில் சிக்குகிறார் அதுமட்டுமில்லாமல் கடந்த காலத்தில் இவர் செய்த செயலால் நிழல் உலக தாதாக்களாலும் பிரச்சனைகளுக்குள்ளாகிறார்.
லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியா தயாரிப்பாளர் சுந்தர் ஆரோன் படத்தைப் பற்றி கூறியதாவது : ராணா நாயுடு சீசன் 2 வெளியீட்டுக்கு தயாராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக சீசன் 1 முடிந்த நாளிலிருந்து சீசன் 2 விற்கான வேலைகளை தொடங்கி விட்டோம். இந்த சீசனில் நடைபெறும் கதை, நோக்கம் மற்றும் பட்ஜெட் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தக் கதைக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் ஒருங்கிணைப்பு அனைத்தையும் லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியாவுடன் இணைந்து Netflix குழு மிகவும் சுலபமாக்கியது.எ...








