புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி - ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் 'அருள்வான்' திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, 'பருத்திவீரன்' சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒ...
சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ல...
முழு நீள காமெடியும் காதலும் தான் “மிஸ்டர் பாரத்” சிரிச்சி ரசிக்க ரெடியாகலாம்…

முழு நீள காமெடியும் காதலும் தான் “மிஸ்டர் பாரத்” சிரிச்சி ரசிக்க ரெடியாகலாம்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்! யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், 'மிஸ்டர் பாரத்' திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டை...
இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம்

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் 'ஜெயன்' அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்! எலிபென்டைன் எக்ஸ் தயாரிப்பில் 'ராஜாஸ் பிளே லிஸ்ட்' என தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர் அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான ஜெயன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் (Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது. குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்! தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுல...
“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ பிரபாஸ்

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ பிரபாஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ் “பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது. Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாட...
மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு...
அங்கீகாரம் விமர்சனம் 3/5

அங்கீகாரம் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சென்னையில் துப்புரவுத்தொழிலாளியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி,கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை – ஒரு மகன்,ஒரு மகள் -ஆகியோரைப் படிக்கவைத்து ஆளாக்க உழைக்கிறார்.அவர்கள் குடியிருக்கும் வீடு எனும் கூட்டை இடித்து அப்புறப்படுத்த அரசாங்கம் துடிக்கிறது.வேலை செய்யும் இடமிடத்தில் கேள்வி கேட்டால் தண்டனை போன்ற பல சிக்கல்களை அந்தப் பெண்மணி எதிர்கொள்கிறார். அவருடைய மகன்,தடகள் ஓட்டப்பந்தய வீரராக இருக்கிறார்.போதிய வசதிகள் இன்றியே ஓடுகளத்தில் பல சாதனைகள் செய்கிறார்.ஆனாலும் அவர் மீது வன்மம் கொண்டு அவரை காமன்வெல்த் எனும் சர்வதேசப் போட்டியில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றன விளையாட்டு ஆணையங்கள்.வலிமையும் அதிகாரமுமிக்க அவற்றை எதிர்த்து ஒற்றை ஆளாக நீதிமன்றம் சென்று தனக்காக தானே வாதாடுகிறார் அவர். அந்த வழக்கின் முடிவென்ன?அவர் சர்வதேசப் போட்டியில் விளையாடினாரா? இல்லையா? என்கிற கேள்விகளுக்கான விடை ச...
சிங்கீதம் – திரைப்பட விமர்சனம் 3/5

சிங்கீதம் – திரைப்பட விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம். இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வருகிறது.அந்த நிலத்தைத் தேடி குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார்.பாலைவனம் போல் காட்சியளிக்கும் அந்தஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்கச்சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள்.அதில் நாயகனுக்கு ஒரு சிக்கல். அதனால், தன் நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து வெளியேற திட்டம் போடுகிறார்.ஆனால்,அவரது திட்டம் நிறைவேறாதபடியும்,அவரால் அங...
கான் சிட்டி விமர்சனம் 3.5/5

கான் சிட்டி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    கான் சிட்டி விமர்சனம் 3.5/5 நடுத்தர வர்க்க வாழ்க்கை, மாதா மாதம் வீட்டுத்தவணை உள்ளிட்ட பல செலவுகள்.வரவுக்கு மேல் செலவு.கடன் வாங்குகிறார்.கட்ட முடியவில்லை.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் நாயகன். அந்த நிலையில்,நாயகி அன்னாபென் உட்பட பலர் முதலீடு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் எல்லோரும் பெரும் சிக்கலில் சிக்குகிறார்கள்.வம்பு,வழக்கு,சிறை என்று போய் கடைசியாக ஊரைவிட்டே போகிறார்கள்.போனவர்கள் மீண்டும் திரும்ப வருகிறார்கள். மீண்டும் மோசடி செய்கிறார்கள்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் கான்சிட்டி. எதிர்மறை நாயகனாகப் பார்த்துப் பழக்கப்பட்ட அர்ஜூன்தாஸ் நேர்மறை வேடத்தில் நடிக்கிறாரே என்று பார்த்தால் போகப்போக அவர் செய்யும் செயல்கள் அடப்பாவி இரகமாக இருக்கின்றன.அந்த வேடத்தை நன்றாகச் செய்து வரவேற...
எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ்

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் - நடிகர் பவிஷ் மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது, தனஞ்செ...