அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: சோனியா காந்தி அறிவிப்பு
132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சோனியா தலைவராக உள்ளார்.
காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 17 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.
வீட்டில் இருந்தபடியே கட்சி மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் 2019-ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் சோனியாவிடம் நிர்ப்பந்தமான ஒன்றாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு...









