சங்கராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி
விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்
சங்கராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன்...









