எந்த ரெய்டுக்கும் எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது – தினகரன் ஆவேசம்
அடையாறில் உள்ள தனது இல்லத்தில் வருமான வரிசோதனை நடைபெறவில்லை - டிடிவி தினகரன்
பேட்டியின் முழு விவரங்கள் :
எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது.
வருமானவரித்துறை சோதனைக்கு பின்னால் மத்திய அரசு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருகிறோம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன்.
வருமான வரித்துறை சோதனை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம்.
ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது.
பச்சை முத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. என் பேட்டியை ஏன் ? ஜெயா டிவியில் போடக்கூடாது ?
மத்திய அர...









