‘டயலாக் கிங்’ சாய்குமார்,பிருத்வி நடிப்பில் கொண்டாட்டத்துடன் தொடங்கிய ‘சௌகிதார்’
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகவுள்ள, பான் இந்திய திரைப்படமான ‘சௌகிதார்’ படத்தின் படப்பிடிப்பு, பெரும் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது.
பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில், இப்படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் கிளாப் அடிக்க, சாய்குமார் ஒளிப்பதிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
'ரதவரா' படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா 'சௌகிதார்' படத்தினை இயக்குகிறார்.
'டயலாக் கிங்' என்று அழைக்கப்படும் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தொட்மனே குடி தன்யாராம் குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படக்குழு படத்தை அறிமுகம் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது.
படம் குறித்து இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா க...









