
துபாய் வான் வெளியில் பறந்த “come back indian 2”
உலக நாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
பெரும் எதிர்பார்ப்புகள் கொண்ட இந்தியன் 2 படத்துக்கு பல்வேறு நாடுகளில் விளம்பரங்கள் பெரும் செலவில் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் துபாயில் ஸ்கை டைவ் என சொல்லப்படும் விமானத்தில் இருந்து வான் வெளியில் குதிக்கும் சாகச நிகழ்ச்சியை இந்தியன் 2 படத்துக்கு துபாய் பாம் சுமைரா கடலுக்கு மேல் வான் வெளியில் நடத்தி இருக்கிறார்கள்.
“எங்க தப்பு நடந்தாலும் அங்க நா வருவேன்” னு கமல் பேசும் டயலாக் உடன் ஒரு டீசர் ரிலீஸ் ஆகி உள்ளது.
இதில் விமானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கைடைவ் வீரர்கள் இந்தியன் 2 பிரமாண்ட போஸ்டரை வானில் பறக்க விட்டபடி தரையிறங்கி வருகிறார்கள்.
இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி உள்ளது.
https://x.com/onlykodanki/status/1808755971747164277
