வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

‘காந்தாரா’ நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது !

‘காந்தாரா’ நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழா நேற்று (பிப்ரவரி 20) மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.   https://twitter.com/sh...
மனம் உடைந்துவிட்டேன்..மயில்சாமி மறைவுக்கு தனுஷ் இரங்கல்!

மனம் உடைந்துவிட்டேன்..மயில்சாமி மறைவுக்கு தனுஷ் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நல்ல திறமை வாய்ந்தவர். மனம் உடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்....
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு !

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்...
கிரண் அப்பாவரமின் ‘வினரோ பாக்யமு விஷ்ணு கதா’ திரைப்படம் எப்படி இருக்கு!

கிரண் அப்பாவரமின் ‘வினரோ பாக்யமு விஷ்ணு கதா’ திரைப்படம் எப்படி இருக்கு!

Uncategorized
'ராஜா வாரு ராணி காரு', 'எஸ்.ஆர். கல்யாண மண்டபம்', 'செபாஸ்டியன்', 'சம்மதமே' போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் வசன உச்சரிப்பு, சுறுசுறுப்பான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் கிரண் அப்பாவரம். இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'மீட்டர்' மற்றும் 'ரூல்ஸ் ரஞ்சன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவைத் தவிர இதரப் படங்களும் கைவசம் வைத்துள்ளார். இவரது முந்தைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை கிரண் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் தற்போது சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வரிசையில், ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள விறுவிறுப்பான குடும்பப் படமான 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' (விஷ்ணுவின் கதையை கேட்டால் புண்ணியம்) தற்போது வெளியாகி பெரும் வரவே...
வைரலாகும் மாவிரன் பட பாடல்!

வைரலாகும் மாவிரன் பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது....
இணையத்தை கலக்கும் ‘தங்கலான்’ கெட்டப்பில் விக்ரமின் புகைபடம்!

இணையத்தை கலக்கும் ‘தங்கலான்’ கெட்டப்பில் விக்ரமின் புகைபடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. https://twitter.com/chiyaan/status/1626496992603168776?s=20...
‘அயலி’ ஜீ5 இணையத் தொடர் வெற்றிக் கொண்டாட்டம் !

‘அயலி’ ஜீ5 இணையத் தொடர் வெற்றிக் கொண்டாட்டம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீ5 தளத்தின் 'அயலி' இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !! இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். Senior Vice President ZEE5 கௌசிக் நரசிம்மன் பேசியதாவது... "அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம...
வைரலாகும் நடிகை பூர்ணாவின் புகைபடம்!

வைரலாகும் நடிகை பூர்ணாவின் புகைபடம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷுட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள பூர்ணா, "வாழ்க்கையின் மிகப் பெரிய அதிசயம், உங்களுக்குள் உயிர் வளர்வதுதான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. https://www.instagram.com/p/CouXe-lh-ud/?utm_sourc...
யோகிபாபுக்கு கையெழுத்துடன் பரிசளித்த தல தோனி!

யோகிபாபுக்கு கையெழுத்துடன் பரிசளித்த தல தோனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தோனி பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுவுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு யோகிபாபு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/iYogiBabu/status/16258...
வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள் தொடங்க நித்யானந்தா திட்டம்!

வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள் தொடங்க நித்யானந்தா திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார். இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், கைலாசா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களை அவரது சீடர்கள் சமூக வலைத...