படத்தின் ஹீரோயின் ஏன் வரவில்லை? ஈ ஓட்ட போய்ட்டாங்களா? – K ராஜன் ஆவேசம்
“ அருவா சண்ட ” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தானு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசியதாவது:-
“இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம்.
தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது “படத்தின் ஹீரோயின் ஏன் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசுவார்.
ஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் கலந்துகொள்வதில்லை.
இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார்.
இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு...









