வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

“சுபாஸ்கரன் சார் சுவாரசியமான மனிதர்; அவருடன் அமர்ந்து இப்படத்தை பார்க்க விரும்புகிறேன்..” – நடிகர் கார்த்தி

“சுபாஸ்கரன் சார் சுவாரசியமான மனிதர்; அவருடன் அமர்ந்து இப்படத்தை பார்க்க விரும்புகிறேன்..” – நடிகர் கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
"இதுபோன்ற படத்தை எடுப்பதற்கு புதிதாக பிறந்து 30 வருடம் வளர்ந்து வர வேண்டும் ; இதுபோன்ற படம் எடுக்க வேண்டுமென்றால் அது மணி சாரால் மட்டும்தான் முடியும்!" - நடிகர் கார்த்தி நடிகர் கார்த்தி பேசும்போது, உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஜெயராம் சாருடன் பணியாற்றுவது பாக்கியம். அவர் மட்டும் தான் நடிகன். நாம் வெறும் ‘ந’ மட்டும் தான் என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோ...
நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *நகைச்சுவையும், திகிலும் கலந்த 'காட்டேரி'* தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத...
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! – தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி!

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! – தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! - தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, , இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர் கிரீடமும், நினைவு பரிசும் வழங்கி இயக்குனர் இமயத்தின் 40...
விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்....
“குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.  ...
செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. இதில், மூன்று வெவ்வேறு அணிக்கு பங்கேற்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இதன் மூலம், ரோனக் இந்தியாவின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், தனது வெற்றியை பகிர்ந்துக் கொண்ட ரோனக் பயிற்ச்சியாளருக்கு நன்றி தெரிவித்தார்....
அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு !!

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு !! உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் மொழிக்கான டிரைலர் வெளியீடு அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘லால் சிங் சத்தா’ படத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் வெளியாகிறது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. உத...
பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் 1986-ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். 1993-ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார். 2011-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இதை தொடர்ந்து மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். இந்நிலையில் ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் ...
தனுஷ் பிறந்தநாள்: புதிய போஸ்டரை வெளியிட்ட வாத்தி படக்குழு!

தனுஷ் பிறந்தநாள்: புதிய போஸ்டரை வெளியிட்ட வாத்தி படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கு வகையில் 'வாத்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.    ...
போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய ‘சீதா ராமம்’

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய ‘சீதா ராமம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய 'சீதா ராமம்'* *‘சீதா ராமம்’ காதல் கடிதத்தை நினைவுப்படுத்தும் = துல்கர் சல்மான்.* *முதன்முதலாக குணசித்திர வேடத்தில் நடித்திருக்கிறேன் = சுமந்த்* நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை...