இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.
'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது. சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால ...









