இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.
அவர்களுடன் இந்தத் தொடரில் திறமை மி...
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. படத்திற்கு 'P T சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
'வேல்ஸ் திருவிழா'வில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்ற முனைவரும், நடிகருமான ...
இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய 'வெள்ளிமலை' படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக்கு நெருங்கிய நண்பர்.
’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்குநரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம்பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது.
எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். அதனால், இந்த...
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.
இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்...
தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர். சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன....
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/4K85nvNYp94...
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும் து...
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்...
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "எங்களை பெருமைப்படுத்தியதற்காகவ...