ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது!

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதிக்குள் வட்டார தலைவர்கள், பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜூலை 21-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் மாநில பொதுக்குழு, செயற்குழு, மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில தலைவர்களுக்கான தேர்தல் ஆகஸ்டு 21-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் அக்டோபர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும். இந்த தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு நவம்பர் மாதம் அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெறும். உட்கட்சி தேர்தல் தொ...
25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்!

25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருகிறது. நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும். அத்துடன், ரிசர்வ் வங்கி...
சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக, சென்னை ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளது....
சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையு...
உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்!

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நட...
முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

HOME SLIDER, Photos, politics, அரசியல்
  முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!    
என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார். ‘நான் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வரும் போது ஒரு செய்தியாளர் உங்களுடைய பேச்சில் தமிழ்நாடு என்று ஏன் நிறைய முறை குறிப்பிட்டீர்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன் அடிக்கடி நான் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளதை. என்னை அறியாமல் நானும் தமிழன்தான் என்று குறிப்பிட்டேன். பிறகு, காரில் இருக்கும்போது யோசித்தேன். ஏன் தமிழன் என்று கூறினேன் என்று யோசித்தேன். என்னுடைய வாயிலிருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது என்று யோ...
பல இடங்களில் டெபாசிட்டே காலி… ஒத்த ஓட்டு பாஜக 3வது பெரிய கட்சியா? பாஜகவை வெளுத்த திருமாவளவன் எம்.பி

பல இடங்களில் டெபாசிட்டே காலி… ஒத்த ஓட்டு பாஜக 3வது பெரிய கட்சியா? பாஜகவை வெளுத்த திருமாவளவன் எம்.பி

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தங்களை மூன்றாவது பெரிய கட்சி என பாஜக கூறிகொள்வதை விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பல இடங்களில் பாஜக டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்றும் ஒத்த ஓட்டு பாஜக என்றும் குறிப்பிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் சமய சார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், எம்எல்ஏக்கள் சின்னத்துரை, அப்துல் சமது,  சிபிஐ தேசிய குழு உறுப்பினர் சி. மகேந்திரன்,  திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்...
உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உத்தர பிரதேச சட்ட சபையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். 12 மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் கோண்டா உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள், இன்றைய வாக்குப்பதிவில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு ...
வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம்  முதலமைச்சர் பேச்சு!

வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைனில் ரஷிய படைகள் 3-வது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து  வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய மு.க.ஸ்டாலின், அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர்  , அவர்கள் அன...