தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பி4, பி5 ஒமைக்ரான் புதிய வைரஸ் பரவுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,603 அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்று அதிகரித்தாலும் உயிர் இழப்பு இல்லாத நிலை.
காய்ச்சல், சளி, தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 7 நாட்கள் தனி...









