கூவம் நதி சீர் செய்யப்பட்டு சென்னை, லண்டனுக்கு இணையாக மாற்றப்படும்- அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !
சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன.
அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். கூவம் நதி சென்னை முழுவதும் ஒடும் நதி.
மழை காலத்திற்கு பின்னர், கூவம் நதியை சீர் செய்யும் நடவடிக்க...









