வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

World News

இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு!

இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது. இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது....
ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

helth tips, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய ...
கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது. இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி ரஷ்யா ஆக்கிரமித்த கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ த...
இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம்  – பொருளாதார நெருக்கடி!

இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம் – பொருளாதார நெருக்கடி!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து கியாஸ் பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது. தற்போதைய நிலையில் தொழிற்சாலைகளுக்கான கியாஸ் மட்டுமே கையிருப்பு இருப்பதால், சமையல் கியாசுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவன தலைவர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார். அடுத்த கியாஸ் தொகுப்பு வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமை தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்....
இலங்கை பிரதமர் ராஜபக்சே நேற்று பதவியை ராஜினாமா செய்து வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார் !

இலங்கை பிரதமர் ராஜபக்சே நேற்று பதவியை ராஜினாமா செய்து வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார் !

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகிந்த ராஜபக்‌ஷே பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது. பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இ...
உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் பொருளாதார வர்த்தக தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.  1.7 பில்லியன் பவுண்டகள் மதிப்பில் இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது புதின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்றும்,  உக்ரைன் மக்களுக்கு எதிரான அவரது சட்டவிரோதப் படையெடுப்பை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத...
ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷிய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதனால் அவர் இறந்துவிடலான் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்...
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
  உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது. இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும் விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்து...
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு!

அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன. பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன. அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின் நேவி சீல் படையை ...
ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது- 26 பேர் மாயம்!

ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது- 26 பேர் மாயம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஜப்பானில்  24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற  சுற்றுலாப் படகு இன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. படகில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகியும் படகில் சென்றவர்களில் ஒருவரும் உயிருடன் கண்டறியப்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது....