புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

politics

நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி காதல் வலை வீசி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி காதல் வலை வீசி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
பீகாரில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா புகைபடத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை காதல் வலையில் வீழ்த்தி பிடித்து உள்ளார். பாரதீய ஜனதா அமைச்சர் ஒருவரின் மொபைல் போனை  திருடி ஒரு பயங்கரமான கும்பல் பயன்படுத்தி வந்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி அந்த கும்பலில் உள்ள ஒருவரை காதலிப்பதாக பொய் கூறி அந்த கும்பலையே பிடித்து உள்ளார். அந்த பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா படத்தை அந்த கும்பலிடம் காட்டி தான் நம்ப வைத்து உள்ளார். பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  தர்பங்கா மாவட்டம் போலீசில் உள்ள பெண் அதிகாரிதான் இந்த சாகசத்தில் ஈடுபட்டார். பாரதீய ஜனதா தலைவர் சஞ்சய் குமார் மகோதன் என்பவரின் விலையுயர்ந்த மொபைல் ஒன்று திருட்டு போனது  இதனை முகம்மது ஹஸ்னைன் என்ற திருடன் திருடி உள்ளான். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பொறுப்பு பெண் போலீஸ...
”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2-வது வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.  அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. லாலு பிரசாத் யாதவ், பிர்சா           முண்டா    சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார். தனக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில், நீதி நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:- “ உண்மையைச் சுற்றி தற்போது பொய் சூழ்ந்துள்ளது. மிக ...
சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!

சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை உள்பட 4 நகரங்களில் தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏ.சி. பெட்டிகள் கொண்ட புறநகர் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மும்பை மேற்கு புறநகர் ரெயில் சேவையின் ஒரு பகுதியாக 12 குளிர்சாதன வசதி பெட்டிகள் கொண்ட ரெயிலை இன்னும் ஒரு சில தினங்களில் இயக்க முடிவாகியுள்ளது. இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, உண்மையில், 2019-2020ம் ஆண்டில் இருந்து அனைத்து புதிய உள்ளூர் ரெயில்களும் குளிர்சாதன வசதியுடன் தானியங்கி கதவுகளை கொண்டு இருக்கும்.  இறுதியாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களிலும் இதனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார். இந்த புதிய ஏ.சி. ரெயில்களுடன் பழைய ரெயில்களும் அடுத்தடுத்து இயக்கப்படும்.  ஆனால் கட்டணம் வேறுபடும். மும்பையில் சர்ச்கேட் மற்றும் போரிவிலி பகுதிகளுக்கு இடையே டிசம்பர் 25ந்தேதி அல்லது 2018 ஜனவரி 1ந...
டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!

டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லி மெஜந்தா லைன் பிரிவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, வரும் 25 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை. தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பாதையை  விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை  12.5 கி.மீட்டர் தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.  மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் துவக்க ...
அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து  பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை...
பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை

பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கும் அடங்கும். இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீதும் மற்றும் சில நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லியில...
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது – டி.டி.வி தினகரன்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது – டி.டி.வி தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தண்டையார் பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- ஆர்.கே நகர் தேர்தலில் எனக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், ஜெயலலிதா வீடியோ குறித்து விரிவாக பேசமுடியாது. வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது. காலையில் தொலைக்காட்சி பார்த்தே இதனை தெரிந்துகொண்டேன். இதனையடுத்து, அவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டபோது, ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என்று துண்டு பிரச்சாரம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீடியோவை வெளியிட்டதாக கூறினார். தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வீடியோவை வெளியிட்டிருக்கலாமே என வெற்றிவேலிடம் கூறினேன். வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதால் நான் வருத்தமடைந்தேன...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவித வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவித வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் என 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள். இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் 174 வாக்குச்சாவடிகளில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் டோக்கன் க...
ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார். நாடே பெரிதும் எதிர்பார்த்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார். இந்த தீர்ப்பை வரவேற்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் ஸ்பெக்ட்ரம். திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி போடப்பட்டதுதான் இந்த வழக்கு. குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு மகிழ்ச்சிக்குரிய ஒன்று. திமுக எந்த தவறும் செய்யவில்லை என்று சிறப்பு நீதிமன்றம் நிரூபித்து விட்டனர். 2ஜ...