திங்கட்கிழமை, ஜூலை 27
Shadow

politics

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் – துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் – துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார். துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியத...
துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

HOME SLIDER, NEWS, Photos, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்....
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. போலீசாரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்....
முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இரங்கல் செய்தி தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் இருந்து திரைத்துறைக்கு உதவி இயக்குநராக வந்து கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் முக்தா சீனிவாசன். பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1957-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முதலாளி’. இந்த முதல் திரைப்படமே இவருக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. முக்தா பிலிம்ஸ் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அந்தமான் காதலி என்றால்...
தமிழக அரசு, மோடி அரசாக ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி குற்றச்சாட்டு

தமிழக அரசு, மோடி அரசாக ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட நவீன என்கவுண்டர் ஆகும். என்கவுண்டரில் தனி நபரை ஓட வைத்து சுடுவார்கள். இங்கு கூட்டத்தை கூட்டி அதில் தனி நபரை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உயிருக்கு ரூ.10 லட்சம் தருகிறோம், ரூ.20 லட்சம் தருகிறோம் என்று விலை கூறுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் அவர் அரசுக்கு சாதகமான கருத்தையே கூறுவார். எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தூத்துக்குடியில் 144 உத்தரவை விசித்திர சட்டமாக்கி விட்டனர். ...
தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? – கிருஷ்ணகிரி பெண்ணிடம் பிரதமர் மோடி பேச்சு

தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? – கிருஷ்ணகிரி பெண்ணிடம் பிரதமர் மோடி பேச்சு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
லவச சமையல் எரிவாயு பயனாளிகள் திட்டம் (உஜ்வாலா யோஜனா) கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரேத்யக ஆப் (செயலி) மூலமும், தூர்தர்சன் மூலமும் இன்று காலை 9.30 மணிக்கு நேரடியாக கலந் துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் இந்தியாவில் பல்வேறு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் இந்திய பெண்களின் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி செல்கிறது. ஏழை, விளிம்பு நிலை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இந்த திட்டம் பலப்படுத்தி உள்ளது. 2014-ம் ஆண்டு வரை 13 கோடி மக்கள்தான் எரிவாயுவை இணைத்து இருந்தனர். அதில் பெரும்பாலானோர் பணக்காரர்கள். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய இணைப்புகள் ஏழைகளின் பயனுக்காக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார். கிருஷ...
20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். தனது தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி பற்றி பிரதமர் மோடி பேசியதாவது :- நாட்டின் 125 கோடி மக்களை வாழ்த்தி ஜகன்நாதரின் பூமியில் இருந்து பேசுவது எனது கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடம் இது. மக்களின் கனவுகள் மற்றும் அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை தொடர்ந்து பணியாற்ற தூண்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலரும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள். அதனால் தான் ஏழைகளின் நலனுக்கு இந்த அரசு அதிக முக்கியத்து...
மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை – ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை – ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இந்நிலையில், பங்கு...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது – டி.எம்.ஜே.ஏ கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது – டி.எம்.ஜே.ஏ கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் ஊடகத்துறை சமீப காலமாக அரசுகள், அதிகார வர்கத்தால் கடும் தாக்குதலை சந்தித்து வருகிறது. தூத்துக்குடியில் மக்கள் உயிரை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அறவழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த மக்கள் எதிர்ப்பு 100வது நாளை தொட்டதால் அதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறவழியில் மக்கள் ஊர்வலமாக சென்றார்கள். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை தன் அடக்குமுறையை மக்கள் மீது செலுத்தியது. அறவழியில் சென்ற மக்களை தடியடி நடத்தி போலீஸ் கலைக்க முயற்சித்ததில் ஏராளமான அப்பாவி மக்கள் தாக்கப்பட்டனர். இதில் தமிழக காவல்துறை அடக்குமுறையின் உச்சமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 11 அப்பாவி மக்கள் பலியானார்...
வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் – ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் – ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் ஜி.வி.பிரகாஷும் அவரது டுவிட்டர் பக்கத்தில் ...