சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

தமிழக அரசு பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு..!

தமிழக அரசு பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச கட்டணம் 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மலைப்பகுதிகளில் அடிப்படை பேருந்து கட்டணத்துடன் 20 சதவிகிதம் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ.17 ஆக இருந்தது. ஆனால் மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு இடைநில்லா பேருந்து மற்றும் புறவழிச்சாலை இயக்க பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு ரூ.18லிருந்து ரூ.27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால...
மணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: தமிழக அரசின் மனு தள்ளுபடி

மணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: தமிழக அரசின் மனு தள்ளுபடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். கடந்த நவம்பர் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இறக்குமதி செய்துள்ள மணல் தமிழக அரசின் கனிம வள சட்டப்படி, தொழிலக பயன்பாட்டிற்கான மணல் (தாதுமணல்) என்ற வரையறைக்குள் வருவதாலும், தாதுமணல் இறக்குமதி செய்வதற்கான உரிமம், விற்பனைக்கு கொண்டு செல்வற்...
ஜெ.,மரண தேதி..! பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன்

ஜெ.,மரண தேதி..! பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெ.,மரண தேதி..! பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் இன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2017 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் மறுநாள் 5-ம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் சசிகலா சகோதரர் திவாகரன் இன்று தெரிவித்துள்ளார். திவாகரனின் இந்த பேச்சு முன்னாள் முதல்வர் ஜெ., மரண சர்ச்சையில் மீண்டும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்திலும் திவாகரன் பேச்சு பெரும் பரபரப்பையும் மக்கள் ம...
பெனாசிர் பூட்டோவை கொன்றது ஏன்?  – தலிபான்கள் வெளியிட்ட புத்தகத்தில் ஒப்புதல்..!

பெனாசிர் பூட்டோவை கொன்றது ஏன்? – தலிபான்கள் வெளியிட்ட புத்தகத்தில் ஒப்புதல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பெனாசிர் பூட்டோவை கொன்றது ஏன்? - தலிபான்கள் வெளியிட்ட புத்தகத்தில் ஒப்புதல்..! பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு பாகிஸ்தானில் இயங்கும் தெக்ரிக்-இ-தலிபான் தீவிரவாதிகள்தான் காரணம் என அப்போதைய அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் குற்றம் சாட்டினார். அதை தலிபான்கள் மறுத்தனர். இந்த நிலையில் தற்போது பெனாசிர் பூட்டோ கொலைக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம் என அறிவித்துள்ளனர். தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுமன்சூர் ஆசிம் முப்தி நூர் வாலி எழுதிய புத்தகம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தில் பார்மல் என்ற இடத்த...
1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி

1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். சுமார் 1 வருட காலம் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை அதன் பிறகு அவரது உடல் நிலை ஓரளவு தேறியது. இதையடுத்து 1 வருடத்துக்கு பிறகு முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி படங்களை பார்வையிட்டார். சமீபத்தில் தனது இல்லத்தில் கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யின் வீடு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ளது. இந்த நிலையில் கருணாநிதி நேற்று இரவு கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு கனிமொழி மற்றும் ராஜாத்தி அம்மாளை சந்தித்தார்.இரவு 8.15 மணிக்கு சென்ற அவர் 9 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் இருந்தார். பின்னர் அவர் அங்கிர...
மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பேரல் 70 டாலர்களை தொட்டதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு கண்டுள்ளன. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் ரஷ்யாவும், கச்சா எண்ணெய்யை அதிகம் விநியோகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதுபோலவே, டாலரின் மதிப்பு சரிந்து வருவதாலும் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, 2014 டிசம்பரில் இதே விலையில் கச்சா எண்ணெய் விற்பனையானது. மூன்றாண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையாவதால், அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் ...
என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
என்னை கொலை செய்ய சதி - பிரவீண் தொகாடியா பகீர் "ராஜஸ்தானில் 2015-ம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பிரவீண் தொகாடியா பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும், அதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸார் என்னை கைது செய்ய வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பவர்கள் நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தான் எனது மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டேன். எனது குரலை நசுக்க சதி நடக்கிறது. நான் பேசக்கூடாது என சிலர் எண்ணுகின்றனர். என்னை கொலை செய்ய சிலர் இங்கு வந்துள்ளனர்’’ பிரவீண் தொகாடியா எனக்கூறினார். இதனிடையே, பிரவீண் தொகாடியா காணாமல் போன சர்ச்சை குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில போலீஸ் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் தலைவர்...
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம் . கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என மரணத்திற்கு முன்பு எழுத்தாளர் ஞானி தனது ஓ பக்கங்கள் வலைதளத்தில் கடைசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரது கடைசி வீடியோ பதிவு...     https://youtu.be/pz7iCqop5Cs
மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் மறுநாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இதையொட்டி 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இந்த பிரமாண்ட சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் தமிழ் சங்கத்தினர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். ஒரிசா கடற்கரை தான் மணல் சிற்பத்துக்கு புகழ் பெற்றது. அங்கு அப்துல் கலாம், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மார்பளவில் உருவாக்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் நினைவுப்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் நிறுவப்ப...
முதல்வர், துணை முதல்வர் இணைந்து  அலங்காநல்லூர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க காளைகள் சீறிப்பாய்ந்தன..!

முதல்வர், துணை முதல்வர் இணைந்து அலங்காநல்லூர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க காளைகள் சீறிப்பாய்ந்தன..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: முதலமைச்சர்-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது.இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக வாடிவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார். “ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம்” என முதல்வர்...