செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

politics

பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் –  அரசுக்கு TUJ கோரிக்கை

பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் – அரசுக்கு TUJ கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு டி.யூ,ஜெ. கோரிக்கை   பணியிலிருக்கும்பாதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டி.யூ.ஜே.) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தினகரன் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளரும், எம்.யூ,ஜெ.வின் பொதுச்செயலாளரும், எனது 30 ஆண்டு கால நெருக்கமான தோழராகிய மோகன் அவர்கள் நேற்று (நவம்பர் 5) முற்பகலில் மறைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியது. மறைந்த டி.யூ,ஜெ. தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களால் பத்திரிக்கை துறைக்கும், பத்திரிகையாளர் ...
முதல் முறையாக கருணாநிதியை வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

முதல் முறையாக கருணாநிதியை வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல் முறையாக கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி ரொம்ப நாட்களாக நடந்து வரும் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. நாளையோடு சரியாக ஓராண்டு முடியும் சாமானிய மக்களை ஏமாற்றிய மோடி அரசின் பண மதிப்பிழப்பு நாளை 8ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் "கருப்பு தினம்" என போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த நாள். அதே போல அதே நாளில் ஆளும் பிஜேபி அந்த நாளை கருப்புப் பணம் ஒழிப்பு நாள் ஆக கொண்டாடப் போவதாக அறிவித்தது. இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை திடீரென பிரதமர் மோடி சந்தித்தது சரிந்து விழும் மக்கள் செல்வாக்கை மீட்டுக் கொள்ளவா... திமுக அறிவித்த போராட்டம் பிசுபிசுக்குமா... மஸ்தான் வித்தை எடுபடுமா... - கோடங்கி...
கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் – கேரள முதல்வர் வலியுறுத்தல்

கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் – கேரள முதல்வர் வலியுறுத்தல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல் மகாத்மா காந்தி, பன்சாரி, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷூக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பது இந்த தேசத்திற்கே தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பட்டியலில் வேறு பெயர்கள் இணையாமல் இருக்க இது போன்று மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் சமூகத்திலும், நாட்டிலும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை கண்டிப்பதாக கூறியுள்ளார்.  ...
அதிகாரிகளை அருவருப்பான கேலிச்சித்திரம் வரைந்ததால் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தோம் – நெல்லை காவல்துறை விளக்கம்

அதிகாரிகளை அருவருப்பான கேலிச்சித்திரம் வரைந்ததால் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தோம் – நெல்லை காவல்துறை விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார். நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையான 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.45 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரும் கடன் தொகையைக் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார். பல முறை மனு அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையினர் கந்து வட்டிக் கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ததால் மனம் உடைந்த அவர் கடந்த மாதம் 23-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்கொளுத்தி தற்கொலை செய்து க...
கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் பணம் தருவார்கள் 7ம் தேதி அரசியல் கட்சிக்கான முன்னோட்ட ஒரு செயலி அறிமுகம் – பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு

கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் பணம் தருவார்கள் 7ம் தேதி அரசியல் கட்சிக்கான முன்னோட்ட ஒரு செயலி அறிமுகம் – பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் உறுதியாக உள்ளேன் - நடிகர் கமல் சென்னை, கேளம்பாக்கத்தில் பிறந்த நாள் மற்றும் நற்பணி மன்றத்தில், 38 வது ஆண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: மக்களுக்கு உதவும் வள்ளல் தேசத்தை உருவாக்கும் நாடு இது. இங்கிருக்கும் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை . கையேந்துபவன் நான்; தமிழ்நாட்டுக்காக ஏந்துகிறேன். தமிழக நலனுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை . பணக்காரர்கள் வரியை சரியாக செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும். ஏதோ ஆர்வத்திற்காக பதவிக்காக பிரச்னைகள் பற்றி நான் பேசவில்லை. சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறை திரும்பி செய்கிறோம். இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை பணக்காரர்கள் பற்றி தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? உறவுகள் செத்த பிறகு தான் புத்தி வருமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும் . அடக்குமு...
திமுக ஆட்சி அமைந்ததும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் அமையும் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

திமுக ஆட்சி அமைந்ததும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் அமையும் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமீரகத்தில் நடைபெற்றுவரும் 36வது சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். சார்ஜாவின் அரசர் மாட்சிமைமிகு சுல்தான் அவர்கள் வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தக திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் சார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டிற்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு ஆச்சர்யப்பட்டேன். எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் சுல்தான் அவர்கள் போற்றுதலுக்குரியவர் என்றேன். பேரறிஞர் அண்...
இந்து தீவிரவாதம் பற்றிய என் பேச்சால் என்னை சுட்டுக்கொல்லப் பார்க்கிறார்கள் – விவசாயிகள் கூட்டத்தில் கமல் பேச்சால் அதிர்ச்சி

இந்து தீவிரவாதம் பற்றிய என் பேச்சால் என்னை சுட்டுக்கொல்லப் பார்க்கிறார்கள் – விவசாயிகள் கூட்டத்தில் கமல் பேச்சால் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
என்னை தீவிரவாதி என முத்திரைகுத்தி சுட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள் என விவசாயிகள் மாநாட்டில் கமல்ஹாசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இந்து தீவிரவாதம் பரவி வருகிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர்,   இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல வேண்டும்‘ என்றும் பேசினார்.. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்,  இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக்ததை சேர்ந்த ப...
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல் முழு  விசாரணை தேவை  வைகோ  வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல் முழு விசாரணை தேவை வைகோ வலியுறுத்தல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ திணிக்கப்பட்டதால், தமிழ்நாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, ஆதிக்கம் செலுத்த முனைந்து, ‘நீட்’டுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த எதிர்ப்புக்களை அலட்சியப்படுத்தியது. இந்நிலையில்தான், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தகுதி வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்ற போதே, வெளி மாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்று அளித்து மருத்துவப் படிப்பில் சேர முயற்சி செய்தனர். அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர், “போலி இருப்பிடச் சான்றிதழ் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார். மேலும் ...
மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் தனது நற்பணி மன்ற இயக்கத்தினர் இதுவரை செய்த பல சேவைகள், இனிமேல் செய்யப் போகும் பணிகள் குறித்து அவர் பேசவிருக்கிறார். அதற்கான விபரங்களை தனது நற்பணி மன்ற இயக்கத்தினரிடம் அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது. அரசியலை பொறுத்தவரை பல திருப்புமுனைகளை உண்டாக்கியது மதுரைதான். மேலும், கமலுக்கு அங்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனவேதான் அங்கு பொது பொதுக்கூட்டத்தை நடத்த கமல் திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை கமல் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்கள், நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பின்  அறிவிப்பார் எனத் தெரிகிறது. மதுரை மாவட்ட மக்கள் புதிய அரசியல் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பவர்கள். எனவே தனது முதல் பிரமாண்டமான பொதுக்கூட்டத்த...
விக்ரம் மகள் திருமணத்தை நடத்திய கலைஞர் கருணாநிதி…!

விக்ரம் மகள் திருமணத்தை நடத்திய கலைஞர் கருணாநிதி…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா, தனது கொள்ளு பேரன் மனுரஞ்சித் திருமணத்தை கோபாலபுரம் வீட்டில் இன்று நடத்தி வைத்தார் கருணாநிதி. உடல் நல குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஓராண்டுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் சென்று கண்காட்சியை பார்வையிட்டார். மு.க.முத்துவின் பேரனும்,தனது கொள்ளுப்பேரனுக்கும் நடிகர் விக்ரம் மகளுக்கும் இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி திருமணம் நடத்தி வைத்தார். மெதுவாக இயல்பு நிலைக்கு வரும் கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.    ...