வெள்ளிக்கிழமை, ஜூலை 24
Shadow

politics

தினகரன் வருகை… ஸ்லீப்பர் செல் அச்சம்…  அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

தினகரன் வருகை… ஸ்லீப்பர் செல் அச்சம்… அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரன் வருகை.. ஸ்லீப்பர் செல் அச்சம்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு தலைமைக் கொறடா பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானதாக உள்ளது. அதை மீறி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராகவும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் சட்டசபையில் செயல்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை பாய்ந்தது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரனே எம்.எல்.ஏ.யாகி சட்டசபைக்குள் வருகிறார். அவருக்கு ஏற்கனவே அ.தி.மு.க. கட்சியிலும், ஆட்சியாளர்களிலும் சிலீப்பர் செல் என்ற வெளிக்குத் தெரியாத ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சட்டசபையில் எழும் பிரச்சினைகளில் அப்படிப்பட்டவர்கள், டி.டி.வ...
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!

கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ் நடிகர் கமல்ஹாசன் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார். தான் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற செயலியையும் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்த கமல்ஹாசன் நேற்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து, சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள். இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தினகரனும் எதிர்வினையாற்றியிருந்தார். வாக்காளர்களை பிச்சைக்காரர்கள...
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது. பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம் ரூ. 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 10 ரூபாய் சாக்லெட் பிரௌன் வண்ணத்தில் உள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது....
அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..!

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்று மலேசியா செல்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங...
தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை தேவை: ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை தேவை: ஏ.ஆர்.ரகுமான்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறார். இதற்காக சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். ‘நேற்று இன்று நாளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 12ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இது குறித்து அவர் கூறும்போது, 'நான் அயல்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னையில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது. ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பற்றி கூறும்போது, ‘ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி. அவர்களுக்குள் ஏதோ ஆதங்கம் இருக்கிறது. அதனால் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ரஜினிகாந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி ...
2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம் 2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த வழக்கிலிருந்து 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன. இதையடுத்து, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், 2ஜி வழக்கில் உண்மை வென்றது என ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 2ஜி வழக்கில் இருந்து நீங்கள் விடுதலையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..ராசாவும் அவரது குடும்பத்தினரு...
வேகமெடுக்கும் ரஜினி அரசியல்…  தாமதமாகும் கமல் அரசியல்… -கோடங்கி

வேகமெடுக்கும் ரஜினி அரசியல்… தாமதமாகும் கமல் அரசியல்… -கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வேகமெடுக்கும் ரஜினி அரசியல்... தாமதமாகும் கமல் அரசியல்... -கோடங்கி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கம் மூலம் சமூக பிரச்சினைகள் பற்றி கடும் விமர்சனம் செய்து வந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். அரசியல் அறிவிப்புக்கு பிறகு ஒரு காலை நேரத்தில் கொசஸ்தலை ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளதைப் பார்த்து அதிரடி ஆய்வு செய்தார். அரசியலுக்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார். கமல் அரசியல் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு திடீரென கமல் அரசியல் கருத்துக்கள் எதையும் பதிவிடாமல் அமைதியானார். அதற்கு காரணம் விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல். இதற்காக கமல்ஹாசன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய புயலாக நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் செய்துள்ளார். கடந...
அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச கட்டுப்பாடு – இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச கட்டுப்பாடு – இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். 1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்) 2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்) 3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்) 4. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்) 5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்) 6. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்) 7. ம.அழகுராஜ் (எ...
கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன் – ரஜினிகாந்த்

கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்க போவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்ட ரஜினிகாந்த், கருணாநிதி எனது நீண்ட கால நண்பர் என நிருபர்களிடம் கூறினார். சரியாக, 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அவருடன் சென்ற ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். கருணாநிதியை சந்தித்தபின் வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிட...
ரஜினிகாந்த்  பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயம்..!

ரஜினிகாந்த் பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு கடைசி நாளில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. அதிலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ரஜினியின் ஆஸ்தான ஆன்மீக குருவான பாபா முத்திரையை ரஜினி காண்பித்தார். அதைத்தொடர்ந்து பாபா முத்திரைதான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கக்கூடும் என பேசப்பட்டது. ரஜினி ரசிகர்கள் சந்திப்பு நடந்த மேடையில் பாபா முத்திரை வைக்கப்பட்டிருந்தது. வெண்மையான தாமரை முன்பாகவும், அதன் பின்னால் பாபா முத்திரையும்  இருந்தது. இந்த முத்திரையை சுற்றி நாகம் இருப்பது போலவும், முத்திரையின் மேலே ஒரு பக்கம் நாகத்தின் தலை படமெடுக்கும் நிலையிலும், இன்னொரு முனை வால் பகுதியாகவும் காணப்பட்டது. நல்ல வேளை நாகம் எந்த அரசியல...