உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வரும் நிலையில் இன்று அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வரும் நிலையில் இன்று அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை சென்னை வர உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று சென்னையில் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.உரசல்மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.,விற்கு, தற்போது தமிழகத்தில், ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், கணிசமான எண்ணிக்கையில், எம்.எல்.ஏ.,க்களை பெறுவதற்கான, பல்வேறு பணிகளை, பா.ஜ., தேசிய தலைமை துவக்கி உள்ளது.தினமும் மாற்று கட்சியில் உள்ளவர்களை, கட்சியில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், முகவர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டண...









