சூடுபிடித்த சூர்யா – கீர்த்தி சுரேஷ் ஜோடியின் `தானா சேர்ந்த கூட்டம்’ பட வியாபாரம்..!
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியருந்தது. அதேபோல் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படத...









