சென்னைக்கு பெரிய அளவில் தொற்று நோய் ஆபத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வழங்கிய அறிவுரைகளை தமிழக அரசு புறந்தள்ளியதன் பாதிப்புகளை சென்னை புறநகர் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. 8 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியேறி விட்டனர். கோவிலம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான த...









