அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக
தொண்டர்களிடம் துண்டு விரிக்கும் கமல்ஹாசனை வேண்டுமானால் அரசியல் பிச்சைக்காரர் என சொல்லலாம் என நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் தேவை என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.“கருத்துக்குருடரா, காழ்ப்புணர்ச்சி முரடரா” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த கட்டுரையில், பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக...









