சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்…முன்ஜாமீன் மனு மீண்டும்  டிஸ்மிஸ்

3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்…முன்ஜாமீன் மனு மீண்டும் டிஸ்மிஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்....
இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி

இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், விமர்சனம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்பபோவதாக சுவர்சித்திரங்கள் வரைப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களுள் ஒருவராக வலம் வருகிறார். அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு கூடியுள்ளது. ஆங்காங்கே சுவர்களில், மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம் என்று வரையப்பட்டிருந்தது....
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியின்போது கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மெடிக்கல் காலேஜ் சார்பில் ‘கேன்சர் அவுட்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே, ஹெய்ன்ரிச் கிளாசன், மஹிபால் லாம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம் கலந்து கொண்டு பிங்க் கலர் ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர். கேன்சருக்கு எதிராக வழிப்புணர்வு பிரசாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இணைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன ரகானே கூறுகையில் ‘‘ஒரு விளையாட்டு வீரராக நான் என்ன நினைக...
உலகமே உற்றுநோக்கும் வரலாற்றில் எழுதக்கூடிய அந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க உள்ளது

உலகமே உற்றுநோக்கும் வரலாற்றில் எழுதக்கூடிய அந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க உள்ளது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார். கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டிரம்ப் - கிம் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன். உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் என டிரம்ப் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ...
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது..!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர். இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிர...
ஐபிஎல் 2018 – 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

ஐபிஎல் 2018 – 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். மும்பை அணி...
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அ...
கர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு

கர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - வாக்குகளுக்கு மழையாய் கொட்டும் கருப்பு பணம் கர்நாடகாவில் வருகிற 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இவ்வாறு பறிமுதலான பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.120 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறுகையில், ‘பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.75.94 கோடி பணம், ரூ.23.98 கோடி மதிப்புள்ள மது, ரூ.62.46 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், ரூ.43.25 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார். இதற்கிடையே பெலகாவி அருகே வாக்காளர்களுக்கு கொடுப்...
ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டம்

ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் 72 மணி நேரம் வேலை நிறுத்தம் போராட்டத்தை துவங்க உள்ளனர் 7-வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை ஹனியார் மையமாக்க கூடாது, தேசிய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வ்வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று முதல் ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 72 மணி நேர போராட்டத்தை துங்க உள்ளனர். ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்படி நடைபெற்றால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுத...
சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இருந்து 3,685 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஏன் அமைக்க முடியவில்லை என்ற காரணத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர் ஒவ்வொருவருக்கும் ரெயில் கட்டணம் மற்றும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாண...