மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்
இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் மறுநாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர்.
இதையொட்டி 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இந்த பிரமாண்ட சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் தமிழ் சங்கத்தினர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
ஒரிசா கடற்கரை தான் மணல் சிற்பத்துக்கு புகழ் பெற்றது. அங்கு அப்துல் கலாம், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மார்பளவில் உருவாக்கப்பட்டது.
ஆனால் மாமல்லபுரத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் நினைவுப்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் நிறுவப்ப...









