ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசைவர் சிற்பம்!
ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட வீரசைவர் சிற்பம்
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே அகரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சூரியனார் கோவிலில் வீரசைவர்கள் உயிர்த்தியாகம் செய்வது போன்ற சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கோவில் குறித்த விரிவான ஆராய்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சிற்பம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தெலங்கானா ஆளுநர் பழமை வாய்ந்த சூரியனார் கோவில் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்தனர். கோவிலைப் பாதுகாக்க உதவுவதாக ஆளுநர் தமிழிசை உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தொல்லியல் துறை இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் சூரியனார் கோவிலுக்குச் சென்று அதன் ...









