திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா!
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா!
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,384 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோ...









