தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட களத்தில் கமல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. வர்த்தகர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இஆணீஆஈஏஏ ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குமரெட்டியாபுரம் மக்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக நான் இங்கே வந்திருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். நான் 5 வயதிலேயே கேமிரா முன்பாக வந்தவன். ஆயிரம் கேமிராவைக் கண்டவன். மக்களே எனக்கு தேவைக்கு அதிகமான விளம்பரத்தை தேடித் தந்திருக்கிறார்கள். அதனால், நான் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 க...









