வரும் 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம்
*குன்னம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
* நாளை மறுநாள் முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த திட்டம்
நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அதிமுக அமைச்சர் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது.. ஸ்டாலின்
மும்முனை தாக்குதல்களில் நாம் மாட்டிக் கொண்டாலும் நாம் 6வது முறையாக வெற்றிபெற வேண்டும். அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி தப்பாது என நிரூபிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி துவங்க வைக்கப்படுகிறது. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.அர்ச்சுனன் குறி போல், திமுக குறி தப்பாது என்பதை நிரூப...
சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் இறுதியில் தான் சசிகலா விடுதலை செய்யப்படுவாராம்!
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, கர்நாடகா சிறைத்துறையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டைனைக்காக அடைக்கப்பட்டனர்.
அவர்களது தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ஆம் திகதியோடு முடிவடைய உள்ளதாகக் கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.
இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் விடுதலைக்கான பூர்வாங்க வேலைகளை ஏற்கனவே சிறைத்துறை தொடங்கிவி...
தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா
நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால் நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.
நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்....
இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பை தடுக்கும்வகையில் அந்நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின்
கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும்
அதிகமானோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது.
இதனால், இங்கிலாந்தில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் புதிய உச்சத்தை தொட்டது.
தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் இவ்வளவு வேகமாக பரவ காரணம் என்ன? என்பது குறித்து இங்கிலாந்து
விஞ்ஞானிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி செய்தனர்.
...
மகாராஷ்டிராவில் இனி மற்றொரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவையில்லை என மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பொது இடங்களுக்கு செல்லும்போது அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். வரும் முன் காப்பதே சிறந்தது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டும் என சிலர் எனக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால், மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை....
மேற்குவங்காளத்தின் டைமண்ட் ஹார்பர் பகுதிக்கு கடந்த 10-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, ஜேபி நட்டா பயணித்த வாகனமும், அவரது பாதுகாப்பிற்கு வந்த வாகனங்கள் மீதும் மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஜே.பி.நட்டா-வின் பயணத்திற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடம்மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விடுவிக்க மேற்குவங்காள அரசு மறுத்துவிட்டது. இதனால், மத்திய பாஜக அரசுக்கும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை தொட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆதரவான கர...
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாராவுக்கு இன்று திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத்வாராவிற்குள் சென்ற மோடி அங்கு வழிபாடு நடத்தியதுடன், குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்.
திட்டமிடப்படாத திடீர் பயணம் என்பதால் மோடி குருத்வாராவுக்கு சென்றபோது, அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. குருத்வாராவில் வழிபட்ட அவர், அங்கிருந்த சீக்கிய பக்தர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வரலாற்று சிறப்பு மிக்க ரகாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இன்று வழிபாடு நடத்தினேன். ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன். குரு தேஜ் பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒ...
கூட்டணிக்குள் பாஜக முருகன் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - புகழேந்தி
அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே நேற்று அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாரு...
பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தல் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளாஅர். இது விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மாஸ்டர்’படம்;. இப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டில் மிகக்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் எப்போது படம் ரிலீஸாகும் எனப் பெரும் கேள்விகள் ரசிகர்களிட,ம் எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. குறிப்பாக இப்படம் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் பிரமாண்டமாக ரி...