இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் - டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.
நாட்டில் 156 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்து உலகிற்கு இந்தியா நம்பிக்கையின் பூச்செண்டை பரிசாக அளித்துள்ளது.
இந்தியர்களாகிய நமக்கு நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. 21-ம் நூற்றாண்டை இந்தியர்களின் மனோபாவம் மற்றும் திறமையால் மேம்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது.
இந்தியா உலகின் 3-வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது.
கொரோனா தொற்று காலங்களில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி பல நாடுகள...









